நயன்தாரா 75 வது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா என்பவர் இயக்க இருக்கிறார் என்பதையும் பார்த்தோம்.
மேலும் நயன்தாராவுடன் ஜெய், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சத்யராஜ், குமாரி சச்சு, அச்சுதகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
தமன் இசையில் சத்ய சூரியன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜை உடன் தொடங்கிய நிலையில் இந்த பூஜைக்கு பட குழுவினர் வருகை தந்தார். குறிப்பாக நயன்தாரா இந்த படத்தின் பூஜைக்கு வருகை தந்து வந்தார் என்பதும் அது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் ஜீ ஸ்டுடியோ தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
With the blessings of one and only Superstar @rajinikanth, we have commenced shooting for #LadySuperstar75 #Nayanthara #N75 @Nilesh_Krishnaa @sathyaDP @MusicThaman @editorpraveen @Gdurairaj10 @ZeeStudios_ @tridentartsoffl @NaadSstudios #Ravindran @Naadsstudios @SETHIJATIN… pic.twitter.com/8SdjeAsSvk
— Zee Studios South (@zeestudiossouth) April 8, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments