முகேஷ் அம்பானி மகன் திருமண விழாவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வெகு விமர்சையாக நடக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான், பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் உள்ளிட்ட உலக பெரும்புள்ளிகள் இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். அவர் இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அம்பானி வீட்டு இல்ல திருமண விழாவில் நம்ம சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களும் லதா அம்மாவும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களும் சற்று முன்..#Vettaiyan pic.twitter.com/XOOLS995Xk
— என் உயிர் உள்ளவரை Superstar ரஜினி ரசிகன் (@Kingkabilans) March 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com