close
Choose your channels

அந்த பக்கம் ராமர் கோவில், சசிகலா.. இந்த பக்கம் ஸ்டாலின், கீ வீரமணி.. எல்லா பக்கமும்  ரவுண்டு கட்டும் ரஜினி..!

Tuesday, February 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு பக்கம் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சென்ற ரஜினிகாந்த், அதனை அடுத்த சில நாட்களில் சசிகலாவின் புதிய வீட்டிற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவிட திறப்பு விழாவுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் திராவிட கழகத் தலைவர் கீ வீரமணி அவர்களையும் சந்தித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார். இதனால் ரஜினிகாந்த் அனைத்து பக்கமும் ரவுண்டு கட்டி சந்திப்புகளை நிகழ்த்தி வருகிறார் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புனரமைக்கப்பட்ட நினைவிடம் நேற்று திறக்கப்பட்ட நிலையில் இதில் பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் ’கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம், நினைவிடம் மிகவும் அருமையாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது முதல்வர் மு க ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் கி வீரமணி, அமைச்சர் உதயநிதி ஆகியோர்களுடன் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருந்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment