'தலைவர் 168' படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,February 24 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது என்பதை பார்த்தோம்

மேலும் அப்டேட் கொடுப்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் போல் எந்த நிறுவனமும் இருக்க முடியாது என்பது போல் இந்த படத்தின் அப்டேட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது வெளிவந்து ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தி வந்தன என்பது தெரிந்ததே

இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இணைந்த அப்டேட்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப்போது தெரிவித்து வந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மற்றொரு சூப்பர் அப்டேட் வெளிவந்துள்ளது

இதன்படி இந்த படத்தின் டைட்டில் ’அண்ணாத்த’ என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய அட்டகாசமான ஸ்டைலிஷ் ஸ்டில் ஒன்றும் வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் விசிலடித்து இருக்கும் இந்த ஸ்டில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது