அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்; நியூ லுக்கில் செம்ம தலைவா.. புகைப்படத்தை பகிர்ந்த செளந்தர்யா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அம்பானி வீட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் நியூ லுக்கில் இருக்கும் புகைப்படத்தை அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வரும் நிலையில் ரஜினிகாந்த் இதில் விரைவில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் கலாச்சார நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நியூ லுக்கில் இருந்த புகைப்படத்தை சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ’நியூ லுக் செம்ம தலைவா’ என பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் லைக்ஸ் குவிந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது
Mumbai with appa dearest .. at aunty Nita Ambani s cultural center opening night !!! New look semma thalaiva 🤩🤩🤩🖤💙🖤 💙#ThalaivarNewLook pic.twitter.com/DBzlug1FN6
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 31, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com