அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்; நியூ லுக்கில் செம்ம தலைவா..  புகைப்படத்தை பகிர்ந்த செளந்தர்யா..!

  • IndiaGlitz, [Saturday,April 01 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அம்பானி வீட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் நியூ லுக்கில் இருக்கும் புகைப்படத்தை அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வரும் நிலையில் ரஜினிகாந்த் இதில் விரைவில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் கலாச்சார நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் நியூ லுக்கில் இருந்த புகைப்படத்தை சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ’நியூ லுக் செம்ம தலைவா’ என பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் லைக்ஸ் குவிந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது

More News

உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்… யார் இந்த அஜய் பங்கா?

அமெரிக்க வாழ் இந்தியரான அஜய் பங்கா என்பவர் உலக வங்கியின் தலைவராகப் போட்டியின்றி தேர்வுசெய்யபட இருக்கிறார்.

சினேகன் வீட்டுக்கு வந்த புது உறவு.. 'துளசி' என பெயர் வைத்த கன்னிகா ரவி..!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன் நடிகை கன்னிகா ரவியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தாரா? கைதாகும் நிலையில் டெனாலாட் டிரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது மன்ஹாட்டன் மாவட்டத்தில் கிரிமினல் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர் கைது

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த அனிருத்-ஹிப்ஹாப் தமிழா ஆதி: செம்ம பாடல் ரிலீஸ்..!

 4 ஆண்டுகளுக்கு பின் அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி இணைந்த பாடல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் அந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அவன் அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்: ஆர்யாவின் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' டீசர்..!

ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காதர்பாட்சா  என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின்