'ஜெயிலர்' படப்பிடிப்பு நடக்கும்போது நெல்சன் எங்கே சென்றுள்ளார் பாருங்கள்? வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீத முடிவு விட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தெரிகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தின் படப்பிடிப்பில் ஒரு சிறு இடைவெளி கிடைத்ததை அடுத்து தற்போது நெல்சன் கத்தார் நாட்டிற்கு சென்று உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க போயுள்ளார்.

இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் இந்த படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.