முன்னாள் முதலமைச்சரை திடீரென சந்தித்த ரஜினிகாந்த்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,January 10 2023]

முன்னாள் முதலமைச்சரை திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாக தெரிவித்த நிலையில் அதன் பின் தனது உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது திடீரென ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்தித்து உள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள சந்திரபாபு நாயுடு, ‘எனது நெருங்கிய நண்பர் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை இன்று சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் மரியாதை நிமித்தமாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசியல் குறித்து இருவரும் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.