முன்பு குரூப் போட்டோ.. இப்போது குரூப் உடன் போட்டோ.. பேருந்து பணிமனைக்கு ரஜினியின் திடீர் விசிட்..!

  • IndiaGlitz, [Tuesday,August 29 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு பெங்களூரில் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டக்டர் ஆக வேலை செய்த நிலையில் தற்போது தான் பணிபுரிந்த பேருந்து பணிமனைக்கு சென்று திடீர் விசிட் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகம் ஆகி அதன்பின் வில்லன், குணசித்திர கேரக்டரில் நடித்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கடந்த 45 ஆண்டுகளாக அவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார் என்பதும் தற்போது கூட அவரது படம் 500 கோடி வசூல் செய்யும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையுலகத்திற்கு வருவதற்கு முன்பு அவர் பெங்களூர் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்த நிலையில் இன்று அவர் திடீரென்று தான் பணிபுரிந்த பணிமனைக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவருடன் அந்த பணிமனையில் இருந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

இதே பணிமனையில் அவர் வேலை செய்த போது குரூப்பாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்போது அவரை சுற்றி பணிமனை ஊழியர்கள் குரூப்பாக நின்று கொண்டு எடுத்த புகைப்படத்தையும் ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். பஸ் கண்டக்டர் முதல் சூப்பர்ஸ்டார் வரை என்றும் இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷன் ஆக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பெங்களூரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு ரஜினிகாந்த் சென்று சுவாமி வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

யாரும் முன்வரவில்லை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வீட்டை தைரியமாக வாங்கிய சிம்பு பட நடிகை..!

மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இருந்த மும்பை வீட்டை சிம்பு படத்தில் நடித்த நடிகை ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தலைவர் 170' படத்தில் இணையும் 'பாகுபலி', 'சார்பாட்டா பரம்பரை' நட்சத்திரங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இன்னிக்கு ராத்திரி மிஸ் ஆகிடக்கூடாது, அவன் சாகணும்.. சமுத்திரக்கனியின் 'யாவரும் வல்லவரே' டீசர்..!

சமுத்திரகனி, யோகி பாபு நடித்த 'யாவரும் வல்லவரே' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில்

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர் படத்தில் இணைகிறாரா நாகார்ஜுனா? நாளை அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் மற்றுமொரு மைல்கல் 'தனி ஒருவன் 2': படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்..!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'தனி ஒருவன் 2' உருவாக உள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டோர்