ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி? லேட்டஸ்ட் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தொடர்ந்து ரஜினியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் வீடு திரும்புவது குறித்த தகவல் இன்று மாலை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக இன்று இரவு அல்லது நாளை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி, துணை எதிர்க்கட்சி தலைவர் பன்னீர்செல்வம், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.