ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா 2' படத்தில் ரஜினிகாந்த்? பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,February 22 2023]

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் ’காந்தாரா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் முந்தைய பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ’காந்தாரா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டு தெரிவித்தார் என்பதும் ரிசப் ஷெட்டியும் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தாதா சாகப் பால்கே விருது பெற்ற ரிசப் ஷெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது ’காந்தரா 2’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரிஷப் ஷெட்டி, இதுகுறித்து இப்போது எதுவும் கூற முடியாது என அவர் கூறியுள்ளார். ’காந்தரா 2’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதை ரிஷப்ஷெட்டி மறுக்கவில்லை என்பதால் அவர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ’காந்தரா 2’ படத்தில் ரஜினிகாந்த் இணைந்தால் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடப்பட்டது.

More News

கார்த்தி - நலன்குமாரசாமி படத்தின் நாயகி இவரா?

நடிகர் கார்த்தி தற்போது 'ஜப்பான்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? பாடல் எழுதுகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அதன் பிறகு அவர் நடிக்கவில்லை

100வது பிறந்த நாளை நீச்சல் குளத்தில் டைவ் அடித்து கொண்டாடிய பெண்.. வைரல் வீடியோ..!

100 வயது பெண் ஒருவர் தனது 100வது பிறந்த நாளை நீச்சல் குளத்தில் டைவ் அடித்து கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

மகனின் 10வது பிறந்த நாளை கொண்டாடிய விஜய் பட நாயகி.. அன்பு முத்தங்களின் புகைப்படங்கள்..!

விஜய், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நடிகை ரீமாசென் தனது மகனின் 10வது பிறந்த நாளை ஒட்டி மகனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

காதல் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் தினேஷ் கார்த்திக்.. வைரல் புகைப்படங்கள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கின் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.