ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா 2' படத்தில் ரஜினிகாந்த்? பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,February 22 2023]

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் ’காந்தாரா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் முந்தைய பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ’காந்தாரா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டு தெரிவித்தார் என்பதும் ரிசப் ஷெட்டியும் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தாதா சாகப் பால்கே விருது பெற்ற ரிசப் ஷெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது ’காந்தரா 2’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரிஷப் ஷெட்டி, இதுகுறித்து இப்போது எதுவும் கூற முடியாது என அவர் கூறியுள்ளார். ’காந்தரா 2’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதை ரிஷப்ஷெட்டி மறுக்கவில்லை என்பதால் அவர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ’காந்தரா 2’ படத்தில் ரஜினிகாந்த் இணைந்தால் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடப்பட்டது.