லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைகிறாரா ரஜினிகாந்த்? சூப்பர் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,February 15 2023]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

‘விக்ரம்’ என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே அவர் கமல்ஹாசனின் ’விக்ரம் 3’ மற்றும் கார்த்தியின் ’கைதி 2’ ஆகிய படங்களை இயக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்பட்டது. மேலும் ’லியோ’ படத்தை முடித்துவிட்டு அவர் ’கைதி 2’ படத்தை தான் இயக்கவுள்ளதாக அவரே பேட்டிகளில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை லோகேஷ் கனகராஜ் சந்தித்ததாகவும் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ’லியோ’ படத்தை முடித்தவுடன் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டால் கமல்ஹாசன் மற்றும் கார்த்தி ஆகியோர் லோகேஷ் கனகராஜுக்கு தங்கள் படங்களை விட்டுக் கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்குவதாக இருந்த நிலையில் அந்த படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பிறகு தான் ’விக்ரம்’ என்ற சூப்பர் ஹிட் படம் வெளியான நிலையில் தற்போது ரஜினியே லோகேஷ் கனகராஜை அழைத்து வாய்ப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

காதலர் தினம் கொண்டாட கோவா சென்ற காதல் ஜோடிக்கு பரிதாப முடிவு..!

நேற்று உலகம் முழுவதும் காதலர்கள் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய நிலையில் மும்பையை சேர்ந்த காதல் ஜோடி காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற நிலையில் அங்கு அவர்களுக்கு

பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி நடித்த ஓரின சேர்க்கையாளர் படம்: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்..!

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும்  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

காதலர் தினத்தில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கி கொடுத்த பால சரவணன்.. வைரல் வீடியோ..!

தமிழ் திரை உலகின் காமெடி மற்றும் குணசித்திர நடிகர் பாலசரவணன் நேற்று காதலர் தினத்தில் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் பரிசு வாங்கி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

இந்தி திரையுலகிற்கு செல்லும் சாம் சிஎஸ்.. பிப்ரவரி 17ல் ரிலீஸ்..!

'விக்ரம் வேதா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தற்போது இந்தி வெப் சீரிஸ் ஒன்றுக்கு இசையமைத்திருப்பதாகவும் அந்த வெப் சீரிஸ் நாளை மறுநாள்

40 வயதிலும் கிளாமரில் கலக்கிய விஜய், விஷால் பட நடிகையின் புதிய பட அறிவிப்பு..!

விஜய், விஷால் படங்கள் உள்பட பல படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு தற்போது 40 வயது ஆகி வரும் நிலையில் இந்த வயதிலும் அவர் தனது சமூக வலைதளத்தில்