ரூ.2000 கோடி உறுதியா? அட்லி - சல்மான் படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,June 24 2024]

அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடிக்க இருப்பதாகவும் இதனால் இந்த படம் ரூ.2000 கோடி வசூல் உறுதி என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் ஒரு சில காரணங்களால் அல்லு அர்ஜுன் நடிக்காத நிலையில் அடுத்ததாக அட்லியின் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பதாகவும், ஏஆர் முருகதாஸ் படத்தை முடித்தவுடன் அட்லி படத்தில் அவர் இணைந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

மேலும் இந்த படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் பெரிய ஹீரோக்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் இந்த படம் உலகம் முழுவதும் 2000 கோடி வசூல் செய்யும் ஒரு மாபெரும் ஹிட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்த் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் தரமான சம்பவம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'குட் பேட் அக்லி' படத்தில் இந்த காமெடி நடிகரா? அஜித்துக்கு சரியான ஆள் தான்..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அவர் முதல் முறையாக அஜித்துடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

'புதிய விளையாட்டு ஆரம்பம்': அடுத்த படத்திற்காக வேற லெவலில் மாறிய லெஜண்ட் சரவணன்..!

பிரபல தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் நடித்த 'லெஜன்ட்' என்ற திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1998ஆம் ஆண்டில் அவரும் நானும்.. பிரேம்ஜி மனைவி இந்துவின் இன்ஸ்டா போட்டோ வைரல்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி கடந்த சில நாட்களுக்கு முன் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பதும் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது

'கோட்' படத்தின் பட்ஜெட் எவ்வளவு? தயாரிப்பாளரே சொன்ன ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு பக்கம் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளும்

'அரண்மனை 4' படத்தில்  போட்டி.. ராஷி கண்ணாவை வீட்டிற்கு அழைத்து தமன்னா செய்த தரமான செயல்..!

சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4' திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும்