close
Choose your channels

ரஜினியின் 'ஜெயிலர்' அடுத்தகட்ட பணி தொடக்கம்.. வைரல் புகைப்படம்..!

Saturday, June 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பணியை தொடங்கி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த விநாயகன் தனது பகுதியின் டப்பிங் பணியை செய்து வருகிறார். ரஜினிகாந்த் தற்போது புதுச்சேரியில் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அந்த படப்பிடிப்பை முடித்தவுடன் ‘ஜெயிலர்’ படத்தின் டப்பிங் பணியை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தொடரும்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் இரண்டு பாடல்கள் மற்றும் து ஒரு சில தீம் டிராக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பராக வந்திருப்பதாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment