நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம்: ரஜினிகாந்த் சுதந்திர தின வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக பிரதமர் மோடியின் கோரிக்கையின்படி ஏராளமானோர் தங்கள் வீட்டு முன் தேசியகொடிகளை ஏற்றி வருகின்றனர்.
திரையுலகினர் பொருத்தவரை ரஜினிகாந்த், விஜய், மோகன்லால் உட்பட பல பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய சுதந்திர தினம் குறித்து ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆவது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் எல்லோருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக, நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ வருடங்கள், பல லட்சம் பேர் எவ்வளவோ சித்திரவதைகள் கொடுமைகள் அன்பவித்துள்ளார். எத்தனையோ பேர் அவர்களுடைய உயிரை தியாகம் செய்து இருக்கிறார்கள்.
அந்த சுதந்திர தியாகிகளுக்கு, அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ஆம் தேதி சாதி மத கட்சி வேறுபாடு இல்லாமல் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் ஒரு தேசிய கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகள் ஆன குழந்தைகள் இளைஞர்கள் கையால் நம் வீட்டு முன்னால் அந்த கொடியை பறக்க விட்டு நாம் பெருமைப்படுவோம்.
நாடு இல்லை என்று சொன்னால் நாம் இல்லை, நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம். இவ்வாறு ரஜினிகாந்த் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
#ஒவ்வொரு__வீட்டிலும்__தேசியக்கொடி????#நாம்__இந்தியனென்று__பெருமைகொள்வோம்?? pic.twitter.com/VXrQSqNf8h
— Rajinikanth (@rajinikanth) August 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments