குற்றங்கள் புற்றுநோய் மாதிரி, அதை வளரவிடக்கூடாது: 'வேட்டையன்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படத்தின் இரண்டரை நிமிடங்களுக்கும் மேலான ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே டீசரில் பார்த்தபடி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்திருக்கும் ரஜினிகாந்த் சமூக விரோதிகளை சரமாரியாக என்கவுண்டர் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு அநீதியை நீதியால் தான் எதிர்க்க வேண்டும் அநீதியால் எதிர்க்க கூடாது என்று சொல்லும் அமிதாப்பச்சன் கேரக்டர் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக விரோதிகள் செய்யும் செயல்களால் காவல்துறைக்கு கெட்ட பெயர் ஏற்படும் நிலையில் அந்த கெட்ட பெயரை மூன்றே நாள்களில் சரி செய்து தருகிறேன் என்று களம் இறங்கும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேட்டையன் என்ன செய்கிறார்? அவர் சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக எப்படி மாறுகிறார்? இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? வேட்டையனுக்கு ஆதரவாக செயல்படும் பகத் பாசில் கேரக்டர் என்ன ஆகியவை ட்ரைலரில் உள்ள காட்சிகளாக உள்ளன. இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.