என்கவுண்டர்ங்கிற பேருல கொலை பண்றதுதான் ஹீரோயிஸம்? 'வேட்டையன்' டீசர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இன்று சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த டீசரில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேட்டையனை பற்றி, அமிதாப்பச்சன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்யும் காட்சிகளுடன் தொடங்குகிறது.
"இந்த நாட்டில் லட்சக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் இருக்கும்போது, இவரை மட்டும் அடையாளம் தெரிகிறது. எப்படி இது?" என்று அமிதாப் பச்சன் கேட்க, ரித்திகா சிங் "அவர் மிகவும் பயங்கரமான போலீஸ் ஆபீசர்; தைரியமாக அவர் என்கவுண்டர் செய்வதால், அவர் ஞாபகம் வைக்கப்படுகிறார்" என்று பதிலளிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ‘வேட்டையன்’ தவறு செய்பவர்களை என்கவுண்டர் செய்யும் காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. "எஸ்பிங்கிற பேருல ஒரு எமன் வந்திருக்கான்" என்று வில்லன்கள் அதிர்ச்சி அடைய, அப்போது வில்லன்களில் ஒருவர் "நம்ம ஊர்ல நாலு பப்ளிக்கை கொலை பண்ணினா, அந்த எஸ்பியை டிரான்ஸ்பர் பண்ணிவிடுவாங்க" என்று சொல்கிறார்.
"என்கவுண்டர் என்ற பெயரில் கொலை பண்ணும் போது தான், ஹீரோயிசமா? என அமிதாப் கேட்க, அதற்கு பதிலளிக்கும் வகையில் ரஜினிகாந்த், "என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல; இனிமேல் இது மாதிரி குற்றம் நடக்கக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என்று கூறுவதுடன் இந்த டீசர் முடிவடைகிறது. மொத்தத்தில், இந்த டீசர் ‘வேட்டையன்’ படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments