close
Choose your channels

ரஜினியின் ‘வேட்டையன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கலா?

Monday, August 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை லைக்கா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படம் அக்டோபர்10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே நாள்களில் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment