close
Choose your channels

பொங்கல் வாழ்த்து சொல்ல வந்த 'வேட்டையன்': ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கலர்ஃபுல் போஸ்டர்..!

Monday, January 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பொங்கல் சிறப்பு போஸ்டர் வெளியாகும் என நேற்று செய்திகள் வந்தது. இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘வேட்டையன்’ படத்தின் பொங்கல் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் இந்த கலர்ஃபுல் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துப்பாக்கியை ஏந்தியபடி ஆவேசமான இருக்கும் இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்களுக்கான பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது. மேலும் ‘வேட்டையன்’ சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment