சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'வேட்டையன்': மாஸ் அறிவிப்பை வெளியிட்ட லைகா..!

  • IndiaGlitz, [Saturday,September 07 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ’வேட்டையன்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது. அனிருத் கம்போஸ் செய்த ’வேட்டையன்’ படத்தின் சிங்கிள் பாடலான ’மனசிலாயோ’ என்ற பாடல் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பொதுவாக ரஜினி படத்திற்கு மாஸ் பாடல்களை அனிருத் கம்போஸ் செய்வார் என்ற நிலையில் இந்த ’மனசிலாயோ’ பாடலை எப்படி கம்போஸ் செய்துள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.