'வேட்டையன்' படத்தின் சென்சார் தகவல்.. ட்ரிம் செய்ய தேவை இல்லாத ரன்னிங் டைம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வேலையாய் உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’.
அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் பணிகள் முழுமையாக முடிவடைந்தன. சென்சார் அதிகாரிகள் இந்த படத்துக்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என்றும், முதல் பாதை 1 மணி நேரம் 18 நிமிடங்கள், இரண்டாம் பாதை 1 மணி நேரம் 22 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் சில படங்கள் 3 மணி நேர ரன்னிங் டைமுடன் வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளாகியதால், ரன்னிங் டைம் குறைக்கப்பட்டன. ஆனால், ‘வேட்டையன்’ திரைப்படம் 2 மணி 40 நிமிடம் என்பது சரியான ரன்னிங் டைமாக கருதப்படுகிறது.
The hunt is certified! 🔥 VETTAIYAN 🕶️ gets the U/A stamp! 🎬 Get ready for an action-packed extravaganza coming your way! 🤩 #Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions… pic.twitter.com/EN4Z4YZY7h
— Lyca Productions (@LycaProductions) October 1, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com