சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'வேட்டையன்' இசை வெளியீடு எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,September 16 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘வேட்டையன்’ திரைப்படம். இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கூட இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெறும் என்றும் மாலை ஆறு மணிக்கு நடைபெறும் இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தர வேண்டும் என்றும் லைகா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிறுவனத்தில் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

லெஜண்ட் சரவணன் அடுத்த படம்.. தூத்துக்குடியில் படப்பிடிப்பு..இசையமைப்பாளர் யார்?

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் மூன்று பிரபலங்கள்

ராகவா லாரன்ஸ் 25வது படம் சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் ரீமேக்கா? என்ன கதை?

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் தமிழ் மற்றும் தெலுங்கில்

ரஜினி, விஜய், தனுஷ் படங்களின் டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்.. கைதாவாரா?

ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் கூறப்பட்டுள்ள நிலையில்

'கண்மணி ஓகேவா? சம்மதம் பெற்று தாலி கட்டிய தொகுப்பாளர்.. சீரியல் நடிகையின் திருமண வீடியோ..!

'கண்மணி ஓகே வா' என சீரியல் நடிகையிடம் அனுமதி வாங்கி அதன் பின்னர் பிரபல தொகுப்பாளர் தாலி கட்டிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

மடியில் குழந்தை.. கணவருடன் லிப்லாக்.. அமலாபால் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்..!

நடிகை அமலாபால் தனது மடியில் குழந்தையை வைத்திருக்க, கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள