சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'வேட்டையன்' இசை வெளியீடு எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘வேட்டையன்’ திரைப்படம். இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கூட இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெறும் என்றும் மாலை ஆறு மணிக்கு நடைபெறும் இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தர வேண்டும் என்றும் லைகா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிறுவனத்தில் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
Mark your calendars! 🗓️ The VETTAIYAN 🕶️ Audio & Prevue event is happening on Sept 20 at 📍 Nehru Stadium, 6 PM onwards. Get set for a star-studded evening! 🤩#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan… pic.twitter.com/42S3LQdNed
— Lyca Productions (@LycaProductions) September 16, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com