close
Choose your channels

ரஜினியின் 'வள்ளி' படத்தில் நடித்தவரா இவர்? மனைவி குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!

Monday, April 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தயாரித்த ‘வள்ளி’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் தற்போது மனைவி குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை எழுதி தயாரித்த திரைப்படம் ‘வள்ளி’. இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் என்பதும் அவரது சிறு வயது நண்பர் கே நடராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் மகன் தன்னை ஏமாற்றியதை அடுத்து அவரை தனது இடத்திற்கு வரவழைத்து கொலை செய்து பழிவாங்கும் இளம் பெண் கேரக்டரில் நடிகை பிரியா ராமன் நடித்திருந்தார் என்பதும் முதலமைச்சரின் மகன் சஞ்சய் என்பவர் நடித்திருந்தார் என்பதும், சஞ்சய் இன்னொரு பெயர் பிரசாந்த் சாஸ்திரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் சாஸ்திரி மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அவரது சகோதரி ஒரு சீரியல் நடிகை என்பதும் ரோஜா சீரியலில் காயத்ரி என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி 'மெட்டி ஒலி’ சீரியலில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment