'தலைவர் 172' படத்தை தயாரிப்பது இவரா? இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 172வது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்த நிலையில் இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்று பல கோலிவுட் பிரபலங்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது திரைப்படமான ’வேட்டையன்’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்றும் அவருடைய அடுத்த படமான ‘தலைவர் 171’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது தெரிந்தது.
இந்நிலையில் ரஜினியின் ’தலைவர் 172’ படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியவாலா என்பவர் தயாரிக்க இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’ரஜினிகாந்த் அவர்களுடன் இணைவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் இது எனக்கு மறக்க முடியாத பயணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஜினியின் ’தலைவர் 172’ படத்தை அவர்தான் தயாரிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியவாலா பாலிவுட்டில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்து உள்ளார் என்பதும், குறிப்பாக ’ஹவுஸ் ஃபுல்’ படத்தின் ஐந்து பாகங்களை தயாரித்ததும் ’பாகி’ படத்தின் மூன்று பாகங்களை தயாரித்ததும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழுக்கு முதல் முறையாக என்ட்ரியாகும் இவரது முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தயாரிக்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
It's a true honour to collaborate with the legendary @rajinikanth Sir! Anticipation mounts as we prepare to embark on this unforgettable journey together!
— Nadiadwala Grandson (@NGEMovies) February 27, 2024
- #SajidNadiadwala @WardaNadiadwala pic.twitter.com/pRtoBtTINs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com