எதிர்பார்க்காத கூட்டணி.. 'தலைவர் 172' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ’லால்சலாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் தற்போது 170-வது படமான ’வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை ஞானவேல் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படமான ‘தலைவர் 171’ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 172’ படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ’லியோ’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இப்படி ஒரு கூட்டணியை ரசிகர்கள் எதிர்பாராத நிலையில் இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
தற்போது ’வாழை’ என்ற திரைப்படத்தை முடித்துவிட்டு துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அநேகமாக அவர் ரஜினி படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com