இதுவரை நடிக்காத கதைக்களம்.. முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில்.. 'தலைவர் 171' படத்தின் மாஸ் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Monday,January 29 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ’வேட்டையன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கடப்பாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அதன்படி இந்த படத்தின் கதை இதுவரை ரஜினிகாந்த் நடிக்காத கதைக்களம் என்றும் அதேபோல் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில் என்பதை இன்னும் ஒருசில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு ஒரு பக்கம் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

முருகதாஸ் செய்தது போல் லோகேஷ் கனகராஜ் செய்திருக்கலாம்: எஸ்.ஏ சந்திரசேகர்

'துப்பாக்கி' படம் எடுக்கும்போது அந்த படத்தின் கதை குறித்து நான் இயக்குனர் முருகதாஸிடம் ஒரு சந்தேகம் கேட்டேன். அதை அவர் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப ஒரு காட்சியை கூடுதலாக வைத்தார்.

ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் வேல ராமமூர்த்திக்கு இவ்வளவு சம்பளமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த  ஜி மாரிமுத்துவுக்கு பதில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார் என்பதும் தற்போது மீண்டும் இந்த சீரியல் சூடு பிடித்து ரசிகர்கள்

காஜல் அகர்வாலின் சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம்..! ஒன்றரை வயது குழந்தையின் க்யூட் புகைப்படங்கள்..

நடிகை காஜல் அகர்வால் தற்போது தனது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தனது குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம்

இந்த துணை எனக்கு எப்போது மகிழ்ச்சி அளிக்கும்: சமந்தா பகிர்ந்த புகைப்படங்கள்..!

 நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் 'இந்த துணை எனக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

காதலிக்க கற்று கொள்ளுங்கள், அது உங்களை வாழ வைக்கும்: முத்த வீடியோ வெளியிட்ட சித்தார்த்..

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள், அது உங்களை வாழவைக்கும் என்றும் காதல் தான் வாழ்க்கையில் எல்லாம் என்றும், நடிகர் சித்தார்த் கூறி இருப்பதோடு முத்தம் கொடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்