இதுவரை நடிக்காத கதைக்களம்.. முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில்.. 'தலைவர் 171' படத்தின் மாஸ் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Monday,January 29 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ’வேட்டையன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கடப்பாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அதன்படி இந்த படத்தின் கதை இதுவரை ரஜினிகாந்த் நடிக்காத கதைக்களம் என்றும் அதேபோல் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில் என்பதை இன்னும் ஒருசில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு ஒரு பக்கம் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.