வதந்திக்கு முற்றுப்புள்ளி.. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது 'தலைவர் 171'..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'தலைவர் 171’ திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஆன ’ஜெயிலர்’ திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிபுரிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று மாலை முதல் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் படம் டிராப் என சமூக வலைதளங்களில் சிலர் வதந்தியை பரப்பிய நிலையில் இன்று இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
We are happy to announce Superstar @rajinikanth’s #Thalaivar171
— Sun Pictures (@sunpictures) September 11, 2023
Written & Directed by @Dir_Lokesh
An @anirudhofficial musical
Action by @anbariv pic.twitter.com/fNGCUZq1xi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com