'தலைவர் 169' படம் குறித்த மாஸ் தகவல்: காமெடிக்கு பஞ்சமே இருக்காது போல....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தின் மாஸ் தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் ’தலைவர் 169’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் உள்பட ஒருசில பிரபலங்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில் தற்போது வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

ரஜினிகாந்த் வடிவேலு ஆகிய இருவரும் கடைசியாக இணைந்து நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏற்கனவே நெல்சன் படம் என்றாலே விழுந்து விழுந்து சிரிக்கும் காமெடி காட்சிகள் இருக்கும் என்ற நிலையில் ரஜினி - வடிவேலு இணைந்தால் காமெடி கலக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஆரம்பமாகியுள்ளது.