ஒரு சீனில் கூட ரஜினி இல்லாமல் 7 நிமிடங்கள்..  'லால் சலாம்' படத்தின் 'தேர்த்திருவிழா' பாடல்..!

  • IndiaGlitz, [Monday,December 18 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ’தேர்த்திருவிழா’ சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏழு நிமிடங்கள் கொண்ட இந்த பாடலில் முழுக்க முழுக்க ஒரு கோவில் திருவிழா பாடலாக அமைந்துள்ளது என்பதும் இந்த பாடலில் ஒரு சீனில் கூட ரஜினிகாந்த் இல்லை என்றாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை பாடலை கண் சிமிட்டாமல் பார்க்கும் வகையில் ஒவ்வொரு காட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பாடலை பார்க்கும்போது தெரிகிறது.

ஒரு தேர் திருவிழாவை நிஜத்தில் நேரில் பார்ப்பது போல் காட்சி அமைப்புகள் உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஒவ்வொரு திருவிழாவிற்கும் இந்த பாடலை மக்கள் பாட வைக்கும் அளவுக்கு கம்போஸ் செய்துள்ளார்.

விவேக் பாடல் வரிகளில் சங்கர் மகாதேவன், ஏஆர் ரெஹைனா, தீப்தி சுரேஷ், யோகி சேகர் உள்ளிட்டோர் பாடி உள்ளனர். இந்த பாடல் காட்சியில் விஷ்ணு விஷால், ஜீவிதா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் உள்ளனர். இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு அசத்தலாக உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து விட்டார் என ரசிகர்கள் இந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

அதுக்கு தான் கணிக்கவே முடியாத பைத்தியக்காரனை கூட்டிட்டு வந்திருக்கேன்: 'சலார்' டிரைலர்

 பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படம்  உலகம் முழுவதும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மறு திருமணத்திற்கு வாய்ப்பிருக்கா? ரசிகரின் கேள்விக்கு புள்ளி விவர பதிலளித்த சமந்தா..!

நடிகை சமந்தா பிரபல நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கு ஆண்டுகளில் அதாவது 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

பிங்க் கலரில் ஒரு பிகினி போட்டோஷூட்.. 35 வயது நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

35 வயதான தமிழ் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் குவிந்து

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது... ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும், அவர் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்கள் குவியும்

'பகாசூரன்' படமெடுக்க காரணமே இந்த கேடு கெட்ட பிறவி தான்.. மோகன் ஜி குறிப்பிட்ட பெண் யார்?

மோகன் ஜி இயக்கத்தில் உருவான 'பகாசூரன்' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படம் அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது குறித்த கதை அம்சம்