ஒரு சீனில் கூட ரஜினி இல்லாமல் 7 நிமிடங்கள்.. 'லால் சலாம்' படத்தின் 'தேர்த்திருவிழா' பாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ’தேர்த்திருவிழா’ சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏழு நிமிடங்கள் கொண்ட இந்த பாடலில் முழுக்க முழுக்க ஒரு கோவில் திருவிழா பாடலாக அமைந்துள்ளது என்பதும் இந்த பாடலில் ஒரு சீனில் கூட ரஜினிகாந்த் இல்லை என்றாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை பாடலை கண் சிமிட்டாமல் பார்க்கும் வகையில் ஒவ்வொரு காட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பாடலை பார்க்கும்போது தெரிகிறது.
ஒரு தேர் திருவிழாவை நிஜத்தில் நேரில் பார்ப்பது போல் காட்சி அமைப்புகள் உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஒவ்வொரு திருவிழாவிற்கும் இந்த பாடலை மக்கள் பாட வைக்கும் அளவுக்கு கம்போஸ் செய்துள்ளார்.
விவேக் பாடல் வரிகளில் சங்கர் மகாதேவன், ஏஆர் ரெஹைனா, தீப்தி சுரேஷ், யோகி சேகர் உள்ளிட்டோர் பாடி உள்ளனர். இந்த பாடல் காட்சியில் விஷ்ணு விஷால், ஜீவிதா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் உள்ளனர். இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு அசத்தலாக உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து விட்டார் என ரசிகர்கள் இந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com