தலைவரின் குட்டிக்கதை..  ஏஆர் ரஹ்மான் மேஜிக்.. 'லால் சலாம்' இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,January 23 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ’லால் சலாம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 26ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்றும் இந்த விழாவில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையை ரசிக்கவும் தலைவரின் குட்டி கதையை கேட்கவும் ரசிகர்கள் திரண்டு வருக என்று லைகா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

ஜனவரி 26 குடியரசு தினத்தில் மாலை 4 மணிக்கு இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதை அடுத்து ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர்.

More News

அனுமன் வேடத்தில் நடித்தவர் மேடையிலேயே உயிரிழப்பு.. நடிப்பு என மக்கள் நினைத்ததால் அதிர்ச்சி..!

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் ராமர் குறித்த பாடல்கள் நாடகங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில்  ஹரியானா மாநிலம் பிவானி என்ற பகுதியில் நடைபெற்ற

இதுவரை இல்லாத வேற லெவல் ஓப்பனிங் பாடல்.. 'கங்குவா' படத்தின் ஆச்சரிய தகவல்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த பிரம்மாண்டமான தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில் அதில் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் விவகாரம்: 30 வருடங்களுக்கு முன்பே பிரதமரை கண்டித்த கமல்ஹாசன்..!

அயோத்தியில் நேற்று ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு 30 வருடங்களுக்கு முன்பே இது குறித்து நான் பதில் கூறிவிட்டேன், அதே நிலை தான் தற்போதும் உள்ளது,

அரசியல் பேசுனா என்ன தப்பு.. 'ப்ளூ ஸ்டார்' இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி பாண்டியன்..!

பா ரஞ்சித் பெயரை பேசினாலே  அரசியல் பேசுவதாக சிலர் கூறுகின்றனர். அரசியல் பேசுவதில் என்ன தவறு? என்று நடிகை கீர்த்தி பாண்டியன் 'ப்ளூ ஸ்டார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.