ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது.. வீச்சு தான்.. 'ஜெயிலர்' மாஸ் டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,August 02 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் அப்பாவியாக எந்த வம்புக்கும் போகாத ஒரு கேரக்டரிலும், அதன் பின் திடீரென புலி போல் பாய்வதுமான கேரக்டரில் நடித்துள்ளார். ’ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது, வீச்சு தான் என்ற மாஸ் வசனமும் ’கொஞ்சம் இதோட முடிச்சுக்கலாம் இல்ல’ என ரம்யா கிருஷ்ணன் கேட்கும்போது அவருக்கே உரித்தான சிரிப்பை அடுத்து ’ரொம்ப தூரம் போயிட்டேன், ஃபுல்லா முடிச்சிட்டு தான் வருவேன்’ என்று கூறும் வசனமும் திரையரங்களில் ரசிகர்களுக்கு விருந்தான காட்சிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ஒரு அதிரடி ஆக்சன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து நெல்சன் கொடுத்துள்ளார் என்பதும் அவருக்கே உரிய காமெடியை ஆங்காங்கே வைத்துள்ளார் என்பதும் இந்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரைலரிலிருந்து தெரிகிறது. விநாயகனின் ஆக்ரோஷமான வில்லத்தன நடிப்பு அவரை வேற லெவலுக்கு கொண்டு செல்லும்.

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை, கார்த்திக் அண்ணனின் கேமரா, நிர்மல் படத்தொகுப்பு ஆகியவை இந்த படத்துக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள ட்ரெய்லரில் சிவராஜ் குமார், மோகன்லால், தமன்னா காட்சிகள் இல்லை என்றாலும் இடம்பெற்றுள்ள ரஜினியின் மாஸ் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

எம்.எஸ்.தோனி வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? ரசிகர்களை கலங்க வைக்கும் முக்கிய தகவல்

இந்திய கிரிக்கெட் அணியில் அசைக்கமுடியாத நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் இருந்துவரும்

அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்க தான்.. ரசிகரின் கேள்விக்கு விஜய்யின் எவர்க்ரீன் பதில்..!

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் உச்சத்தில் இருக்கும் நிலையில்  சூப்பர் ஸ்டார் ரஜினியே இது குறித்து சமீபத்தில் நடந்த  'ஜெயிலர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது

'சந்திரமுகி 2' படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த மஹிமா நம்பியார்.. வாழ்த்து தெரிவித்த ராகவா லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவலை நடிகை

கண்ணாடி முன்னாடி கவர்ச்சி போஸ்.. பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாஜ்வா கண்ணாடி முன்னாடி நின்று கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தோளுக்கு மேல் வளர்ந்த சிம்ரன் மகன்கள்.. க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

நடிகை சிம்ரன் தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அதில் அவருடைய இரண்டு மகன்களும் அவருடைய தோளுக்கு மேல் வளர்ந்து பெரிய பையன்கள் ஆகி