'ஜெயிலர்' படத்தின் ரன்னிங் டைம்.. அண்ணாத்த படத்தின் அதே ரன்னிங் டைம்?

  • IndiaGlitz, [Wednesday,August 09 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது

’ஜெயிலர்’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் முதல் பாதி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் என்றும் இரண்டாவது பாதி ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.

ரஜினியின் முந்தைய படமான ’அண்ணாத்த’ 2 மணி நேரம் 43 நிமிடங்கள் என்று இருந்த நிலையில் அந்த படத்தை விட 2 நிமிடங்கள் மட்டுமே ’ஜெயிலர்’ படம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்