சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' ரிலீஸ் தேதி.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’ஜெயிலர்’ படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அந்த மாஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்பது தான் அந்த மாஸ் அறிவிப்பு ஆகும்.

’ஜெயிலர்’ படத்தின் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்த வீடியோவில் இந்த படத்தில் நடித்திருக்கும் முக்கிய நடிகர்களான ரஜினிகாந்த் உட்பட பலரது கேரக்டர்களின் கெட்டப் தெரிய வந்துள்ளது.

ரஜினிகாந்த், சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, ஆகியோர்களின் கெட்டப்கள் மாஸ் ஆகவுள்ளது. குறிப்பாக ரஜினிகாந்தின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை பார்க்கும் போது ’பேட்ட’ மாதிரி ஒரு மாஸ் ஆக்சன் திரைப்படமாக தான் ’ஜெயிலர்’ படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

’ஜெயிலர்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகிவிட்டதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.