பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த பேரன்.. வகுப்பறை வரை சென்ற ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!
- IndiaGlitz, [Friday,July 26 2024]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேரன் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த நிலையில் ரஜினிகாந்த் அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்று வகுப்பறை வரை அழைத்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இரண்டாவது மகள் சௌந்தர்யா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக தனது மகன் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்ததாகவும் இதனை அடுத்து சூப்பர் ஹீரோ தாத்தா எனது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றதாகவும் பதிவு செய்துள்ளார். நீங்கள் எல்லோருக்கும் ஒரு மிகப்பெரிய ரோல் மாடலாக இருக்கிறீர்கள் என்றும் எனது டார்லிங் அப்பா என்றும் சௌந்தர்யா இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் காரில் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த பேரன் புகைப்படம் மற்றும் வகுப்பறையில் பேரனை கொண்டு சென்று ரஜினிகாந்த் விடும் புகைப்படம் ஆகியவற்றையும் சௌந்தர்யா பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த், டிடி உட்பட ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர் என்பதும் ஏராளமான கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.