காவி உடையுடன் இமயமலையில் ரஜினிகாந்த்.. தேர்தல் ரிசல்ட்டை மறைமுகமாக சொல்கிறாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்ற நிலையில் தற்போது இமயமலையில் அவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் இருந்து இமயமலைக்கு கிளம்பிய போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? பாஜக வெற்றி பெறுமா? என்ற அரசியல் கேள்விகளுக்கு ’தயவு செய்து அரசியல் கேள்விகள் வேண்டாம்’ என்று அவர் செய்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் இமயமலையில் உள்ள கேதார்நாத் ,பத்ரிநாத் மற்றும் பாபா குகைக்கு செல்ல இருப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்வேன், அதே போல் இந்த ஆண்டும் செல்கிறேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தில் சாமியார் ஒருவருடன், ரஜினிகாந்த் காவி உடையில் இருப்பது போல் உள்ளது. அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று செய்தியாளர்களுக்கு கோரிக்கை விடுத்த ரஜினிகாந்த் காவி உடையில் இருப்பதை பார்க்கும் போது அவர் மறைமுகமாக தேர்தல் ரிசல்ட்டை தெரிவிக்கிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தேர்தல் முடிவு வெளிவர இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் ரஜினிகாந்தின் இந்த மறைமுக செய்தி உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout