வேற லெவலில் ரஜினியின் லுக்.. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த 'கூலி' புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கூலி’ படத்தின் ரஜினிகாந்த் லுக் டெஸ்ட் குறித்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘கூலி’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்பதும் அனிருத் இசையமைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினிகாந்த் லுக் டெஸ்ட் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருப்பு கண்ணாடி அணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலை, கருப்பு உடை மற்றும் ஸ்டைலிஷ் ஆன ஹேர் ஸ்டைலில் இருப்பதை பார்த்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்று அறிவித்துள்ளதையடுத்து இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.
இந்த படத்தில் ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் வேறு சில பான் இந்திய நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
Look test for #Coolie 🔥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 26, 2024
On floors from July pic.twitter.com/ENcvEx2BDj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com