சூப்பர் ஸ்டார் 'அண்ணாத்த' சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஒரு சிலர் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகாது என்றும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று வதந்தியைப் பரப்பினாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து தீபாவளி ரிலீஸ் என்பதை உறுதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ‘அண்ணாத்த’ படத்தின் சிங்கிள் பாடல் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த பாடல் அவர் பாடிய கடைசி பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்த சிறப்பு போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டரிலும், ‘அண்ணாத்த’ படம் தீபாவளி அன்று வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

More News

குழந்தையின் மருத்துவ செலவு ரூ.16 கோடி: விஜய்சேதுபதி செய்த உதவி

குமாரபாளையம் பகுதியை சேர்ந்த  பாரதி என்ற குழந்தைக்கு SMA எனும் சொல்ல கூடிய முதுகுதண்டவட தசைநார் சிதைவு நோய்க்கான சிகிச்சையின் மருத்துவ செலவுக்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

இது யாருடைய இந்தியா? கமல்ஹாசன் ஆவேச கேள்வி!

பிரபல இந்திய தொழிலதிபர் அதானியின் வருமானம் ஒருநாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் என்று செய்தி வெளியாகி இருக்கும் நிலையில் இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் இது யாருடைய இந்தியா?

நயன்தாரா, பிரபுவை அடுத்து திருப்பதி சென்ற பிரபல நடிகை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் திருப்பதி கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர் என்பதும், தற்போது கொரோனா பாதிப்பு

ஓடிடியில் வெளியாகிறதா 'ஓ மணப்பெண்ணே'?

கொரோன வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் ஒரு சில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே

ஹாஸ்பிடலில் அழுவதற்கும் கட்டணமா? என்னவொரு புது தந்திரம்!

மருத்துவமனை என்றாலே நம்மில் பலருக்கு பயம்தான். அதுவும் அவர்கள் நீட்டும் கட்டண பில்லை நினைத்தால் பீதியே ஏற்பட்டு விடும். இந்நிலையில்