சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'மருதாணி' பாடல் வீடியோ வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மருதாணி’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் அந்த பாடல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற மருதாணி என்ற பாடல் வெளியாகியுள்ளது இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளனர் என்பது இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. மேலும் இந்த பாடலின் சில வரிகள் இதோ

மானா மதுரையில, மாமன் குதிரையில
மால கொண்டு வாரான்

மீனா மினுங்கையில, மின்னி சினுங்கையில
மேளம் கொட்டப் போறான்

ஏ மலந்து மலந்து அனிச்சங்கொழுந்து மணமணக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட

வளந்து வளந்து அழக சொமந்து மினுமினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட

அஞ்சன அஞ்சனமே விழிப்பூச
கொஞ்சுன்னு கொஞ்சுதம்மா வளையோச

மருதாணி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு

மருதாணி செவப்பு செவப்பு
மணமேடை நினைப்பு நினைப்பு

டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை மணி அமுதவன் எழுத நாகேஷ் அஜீஸ், அந்தோணி தாசன், வந்தன ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.

More News

தடுப்பூசிக்கு NO… கொரோனா பாதித்த பிரபல நடிகையின் கருத்தால் சர்ச்சை!

நான் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைத்தான் நம்பியிருக்கிறேன்.

ஆச்சர்யப்பட வைக்கும் டி20 உலகக் கோப்பையின் பரிசுத்தொகை!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

மறுபடியும் பிக்பாஸ் வந்து அபிஷேக் மூஞ்சியில ஒண்ணு போடுங்க: நமீதா வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஆரம்பித்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் என்பதும், நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களில்

சாலையோர கடையில் பேரம் பேசினாரா நயன்தாரா? வைரல் வீடியோ

சாலையோர கடை ஒன்றில் நயன்தாரா பேக் வாங்கும்போது பேரம் பேசியதாக வீடியோ ஒன்று வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிஎஸ்கேவுல அந்த ரெண்டு பேர் கண்டிப்பா இருப்பாங்க: முத்து ஓபன் டாக்!

2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கெத்தாக சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் கடந்த ஆண்டு முதல் அணியாக வெளியேறிய போது மீண்டும்