close
Choose your channels

'அண்ணாத்த' படத்தின் சென்சார் தகவல்: அட்டகாசமான போஸ்டர் 

Saturday, October 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை இந்த டீசர் பெற்றுள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெறும் என்று இப்போதே முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ’அண்ணாத்த’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு, ‘இந்த தீபாவளி சரவெடி தான்’ என்றும் பதிவு செய்து உள்ளது. ’அண்ணாத்த’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுவிட்டதால் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment