'அண்ணாத்த' ஃபர்ஸ்ட்லுக்: ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த சன்பிக்சர்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் ரஜினிகாந்த்தின் டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் மற்ற நடிகர் நடிகைகளின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
மேலும் ’அண்ணாத்த’ படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இடையில் திடீரென ரஜினியின் உடல்நலம், ஊரடங்கு ஆகியவற்றால் படப்பிடிப்பு தடைபட்டதால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளிவருமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’அண்ணாத்த’ திரைபடத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு அதில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியன்று ’அண்ணாத்த’ திரைப்படம் உறுதியாக ரிலீசாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்களை குஷியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் ரஜினி ரசிகர்களே எதிர்பார்க்காத வகையில் சூப்பர்ஸ்டார் இளமையாகவும் ஸ்டைலாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#AnnaattheDeepavali ku ready ah?!@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer #Annaatthe pic.twitter.com/RVVIqO0xJS
— Sun Pictures (@sunpictures) July 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com