சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் சூப்பர் ஃபர்ஸ்ட்லுக்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் அட்டகாசமான போஸில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணைய தளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘அண்ணாத்த’, ரஜினிகாந்த் போன்ற ஹேஷ்டேகுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று மாலை 6 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளதை அடுத்து இன்று முழுவதும் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெண்டிங் தான் சமூக வலைதளங்களில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது,
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
#AnnaattheFirstLook @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals#AnnaattheDeepavali pic.twitter.com/pkXGE022di
— Sun Pictures (@sunpictures) September 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments