ஓடி ஓடி கோப்பைகளை குவிக்கும் ரஜினி பேரன்கள்.. மகிழ்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்த ஐஸ்வர்யா..!

  • IndiaGlitz, [Saturday,February 25 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரன்களும், ஐஸ்வர்யாவின் மகன்களுமான லிங்கா மற்றும் யாத்ரா ஆகிய இருவரும் பள்ளி அளவில் நடந்த ஓட்ட போட்டியில் ஓடி கோப்பைகளை குவித்துள்ள புகைப்படங்களை ஐஸ்வர்யாவின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேரன்களும் ஐஸ்வர்யாவின் மகன்களுமான லிங்கா மற்றும் யாத்ரா ஆகிய இருவரும் பள்ளி அளவில் நடந்த ஓட்ட போட்டியில் வெற்றி பெற்று கோப்பைகளை பரிசாக பெற்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா பதிவு செய்துள்ளார்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எனது மகன்கள் விளையாட்டு போட்டியில் ஓடி வெற்றி பெற்றுள்ளனர் என்று மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் அண்ணன் தம்பி ஆகிய இருவரும் கோப்பைகளுடன் உள்ள புகைப்படத்தையும் அவர் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

பள்ளி அளவில் நடந்த இந்த விளையாட்டு போட்டியை ஐஸ்வர்யா நேரில் கண்டு ரசித்த நிலையில் தனுஷ் இந்த விளையாட்டு போட்டியை பார்க்க வரவில்லை என தெரிகிறது. அவர் தற்போது ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் மகன்களின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.