'கூலி' அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்..! அரசியல் கேள்விக்கு அப்செட்டான பதில்..!

  • IndiaGlitz, [Tuesday,January 07 2025]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது ’கூலி’ படத்தின் அப்டேட்டை கூறினார். ஆனால் அதே நேரத்தில் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என்று கடிந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தாய்லாந்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு 13ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பாங்கில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த கேள்விக்கு ’அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே பலமுறை உங்களுக்கு தெரிவித்து விட்டேன்’ என்று கடிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

ஆஸ்கார் விருது பட்டியலில் 'கங்குவா'.. எந்த பிரிவுக்கு விருது கிடைக்க வாய்ப்பு?

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

2025ல் எந்தெந்த ராசிகளுக்கு Jackpot? எந்த ராசிக்கு சூப்பர் ஸ்டார் யோகம்?

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரீஷ் ராமன் அவர்கள், 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சியின் பலன்களை விரிவாக விளக்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் 'கேம் சேஞ்சர்' வெளியாவதில் சிக்கலா? என்ன நடந்தது? 

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கின்ற நிலையில்,

நயன்தாரா திருமண ஆவணப்படம் விவகாரம்: தனுஷை அடுத்து இன்னொரு நிறுவனமும் வழக்கு..!

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், இந்த ஆவணப்படத்தில் தன்னுடைய அனுமதி இன்றி சில காட்சிகளை பயன்படுத்தியதாக

கவர்னருக்கும், மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவித்த விஜய்.. என்ன காரணம்?

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ரவி அவர்கள் அரசின் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்ததற்கும், சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்யாத மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவித்து