ரஜினிகாந்த் நண்பரின் மகன் திருமணம்.. முன்னாள் அமைச்சரின் மகள் தான் மணமகளா?

  • IndiaGlitz, [Sunday,March 05 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் மகனுக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் அவரை மணந்துள்ளவர் முன்னாள் அமைச்சரின் மகள் என்பது தெரியவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு என்பது தெரிந்தது. இவருடைய மகன் மஞ்சு மனோஜ் மற்றும் பூமா மௌனிகா திருமணம் நேற்று நடந்த நிலையில் இந்த திருமணத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது. மணமகள் பூமா மௌனிகா மறைந்த முன்னாள் அமைச்சர் பூமா நாகிரெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரணிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பின் 2019 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏற்கனவே கணேஷ் ரெட்டி என்பவரை பூமா மெளனிகா திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மஞ்சு மனோஜ் மற்றும் பூமா மௌனிகா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் எளிமையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


More News

சூப்பர் சிங்கர் விவகாரம்.. டிஜே பிளாக்கை சரமாரி கேள்வி கேட்ட பூஜா..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் பூஜாவுக்கு ரொமான்ஸ் பாடல்கள் அதிகம் போடுவதாக அவரது பெரியம்மா டிஜே பிளாக் மீது குற்றம் சாட்டிய புரோமோ வீடியோ வைரலான நிலையில்

ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குறது கத்தியால மட்டுமல்ல, பலமான கைகளாலும் தான்.. 'கப்ஜா' டிரைலர்..!

பிரபல கன்னட நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'கப்ஜா' என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர்

'நான் படிக்காத அடியாளு, நீ படிச்ச அடியாளு'.. ஜெயம் ரவியின் 'அகிலன்' டிரைலர்..!

ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சென்னையில் பரவும் புதிய காய்ச்சலுக்கு இதுதான் காரணம்… ICMR விளக்கம்!

சென்னையில் காய்ச்சல் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

'அடி கட்டழகு கருவாச்சி'.. ஜிவி பிரகாஷின் செம மெலடி பாடல்..!

 தமிழ் திரை உலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என ஒரே நேரத்தில் பிசியாக இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக 'ருத்ரன்' 'கேப்டன் மில்லர்'