திடீரென வெளிநாட்டு சுற்றுப்பயணம் கிளம்பிய ரஜினிகாந்த்.. எங்கே சென்றார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டு சுற்றுப்பயணம் அதாவது மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ’ஜெயிலர்’ மற்றும் ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அவர் இன்று திடீரென சென்னையில் இருந்து மாலத்தீவு தலைநகரான மாலே என்ற நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்று உள்ளார்.

இந்த தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே தமிழ் உட்பட இந்திய திரை உலகினர் பலர் சமீபத்தில் மாலத்தீவு சென்று வந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலான நிலையில் ரஜினிகாந்த்தும் மாலத்தீவுக்கு சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ மற்றும் ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை அடுத்து ஆகஸ்ட் 10ஆம் தேதி ’ஜெயிலர்’ ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை அடுத்து ஒரு சில மாதங்களில் ’லால் சலாம்’ படமும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.