குறி வச்சா இரை விழனும்: 'வேட்டையன்' ரஜினியின் டப்பிங் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
குறிப்பாக இந்த படத்தின் நடித்த நட்சத்திரங்கள் தங்கள் பகுதியின் டப்பிங் பணியை செய்து வந்தனர் என்பதும் சமீபத்தில் கூட ‘வேட்டையன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மஞ்சு வாரியர் டப்பிங் பணியை முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது காட்சிகளின் டப்பிங் பணியை தொடங்கியுள்ள வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவின் இறுதியில் ’டைரக்டர் சார் சூப்பர் சார்’ என்று கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’குறி வச்சா இரை விழனும்’ என்று பேசி டப்பிங் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
Kuri Vechha… Erai Vizhanum. 🦅 Superstar @rajinikanth at the dubbing session. 🎙️ Watchout VETTAIYAN 🕶️ is on the way. 🔥
— GKM Tamil Kumaran (@gkmtamilkumaran) August 31, 2024
Releasing on October 10th in Tamil, Telugu, Hindi & Kannada!#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/Rp0GoaYpYI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments